Wednesday, April 22, 2009

குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது:-

17.04.2009 வெள்ளி:-
குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு ஏன்? வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் குவைத் ஃபாஹஹீல் துனை மண்டல பகுதியான ரிக்கா பகுதியில் தமுமுக மற்றும் பிற சமுதாய சகோதர சொந்தங்களை வர வழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாயவரம் ஆடிட்டர் சாஹுல் ஹமீது தலைமை தாங்கினார். மண்டல தமுமுக செயலாள‌ர் ஷாநவாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதி தொடங்கி வைத்தார்.அய்யம் பேட்டை ஜெ.ஜாபர் அலி முன்னிலை வகித்தார். ரிக்கா தமுமுக தலைவர் ஏ.சாதிக் வரவேற்று பேசினார்.
குவைத்தில் முதன் முறையாக:-
குவைத் தமுமுக வின் நான்கு வருட செயல்பாடுகளில் முதன் முறையாக‌ தமிழகத்திலிருந்து தமுமுக மாநில பேச்சாளர் சகோ:கோவை செய்யது அவர்கள் அலைபேசி மூலம் சிறப்புரையாற்றினார்.
குவைத் இஸ்லாமிய அழைப்பாளர்:-
புலவர்,டாக்டர் சாகுல் ஹமீது ஆலிம் அவர்களும் பேசினார்கள்.கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜமாத்தார்களையும் கூட்டனி தோழமை கட்சியினரை வைத்தும் சமூக நல ஆர்வலர்களையும் அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்க்கு மக்கள் தொடர்பாளர் தஞ்சை அக்பர் பாட்ஷா, ஃபாஹஹீல் மண்டல தமுமுக செயலாளர் அ.அப்துல் வாஹித் மேலப்பாளையம், அற‌ந்தாங்கி அப்துல் அஜீஸ், சாதிக், புதுக்கோட்டை முஜிப்பூர் ரஹ்மான், குவைத் சிட்டி மண்டல தலைவர் நா.பீர்மரைக்காயர், கமருதீன் K O C, சத்ருத்தீன், மற்றும் பெரும்பாலன மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் கிளை பொருளாளர் வி.சாதிக் திருவாரூர் நன்றி உறையாற்றினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
செய்திக‌ள்:நா.பீர்மரைக்காயர். துனை ம‌ண்ட‌ல த‌லைவ‌ர்.

Saturday, April 18, 2009

அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது:-

தமிழக அரசியலில் திருப்பு முனையாக தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளும் மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால், இக்கட்சிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. குவைத்தில் வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்தும். கலந்துரையாடல்கள் மூலமும் தமிழகத்தில் சுமார் 5 லட்ச ஓட்டுகள் குறி வைக்கப்பட்டுள்ளது. இதனை செயல் படுத்தும் விதமாக 16.04.2009 வியாழன் இரவு 7.30 மணியளவில் குவைத்‍ திருச்சி ஓட்டலில் வைத்து தொழிலதிபர்கள், இஸ்லாமிய இயக்க, மற்றும் சங்கத்தின் தலைவர்கள், முக்கியஸ்தர்களை அழைத்து அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குவைத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் திருச்சி அமானுல்லாஹ், தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஷா நாவாஸ் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்.சிறப்புரையாற்ற சவுதி தம்மாம் மண்டல தலைவர் ஆரிப் மரைக்காயர்,கஸாலி குவைத்திலுள்ள பேராசிரியர் தாஜித்தின்,இஸ்லாமிய அலைப்பாளர் அன்வர் ஹுசைன் மற்றும் பல சமூதாய இயக்க தலைவர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமுமுக நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கினைப்பு: குவைத் தேர்தல் பணிக்குழு
தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்:
1.ஷாநவாஸ்
2.முஜிபுர்ரஹ்மான்
3.சாஹுல் ஹமீது
4.அமானுல்லாஹ்
5.இஸ்மாயில்
செய்திகள்:நா.பீர்மரைகாயர்.

Saturday, April 11, 2009

தொண்டர்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார் ஆகி விட்டனர்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம ம க வேட்பாளர் டாக்டர். ஜவஹிருல்லாஹ் அவர்கள் களமிறங்கி இருப்பதால் அத்தொகுதி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். இங்கு போட்டியிடும் O.S மணியனுக்கும், M.H. ஜவஹிருல்லாஹ் அவர்களுக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என்று பரவலான பேச்சாக இருக்கிறது. இங்கு இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் மயிலாடுதுறை ம ம க வினர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
நாங்கள் கலைஞரின் பிரதிநிதியாகவோ, ஜெயலலிதாவின் பிரதிநிதியாகவோ தேர்தலில் நிற்காமல் சமுதாயத்தின் பிரதிநிதயாக நிற்கிறோம் என்று நெஞ்சுயர்த்தி சொல்லும் அளவிற்கு தொண்டர்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார் ஆகி விட்டனர்.
மேலும் மயிலாடுதுறை தொகுதி நிலவரங்களை அறிய...
http://mmkpapanasam.blogspot.com/

Rajaghiri Gazzali

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா!:-

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
நான் இதுவரை வகித்து வந்த தமிழக வக்பு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்.
எனது கடமையை செம்மையாக செய்ய ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் சமுதாய சொந்தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, April 9, 2009

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு:-

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
சலிமுல்லாஹ் கான்

Thursday, April 2, 2009

பத்திரிக்கை செய்திகள்:-



செய்திகள் : நெல்லை உஸ்மான்

தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-
தென்காசி, ஏப். 1:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
செய்திகள் : நெல்லை உஸ்மான்

Saturday, March 28, 2009

ரிக்கா கிளையில் மார்க்க சொற்பொழிவு:-

ரிக்கா தமுமுக கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி:
:27.03.2009 .வெள்ளி குவைத் ரிக்கா பகுதியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை மௌலவி அப்துல் ரஹ்மான் நிஸாமி கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.மண்டலச் செயலாளர் ஷாநவாஸ் தொகுத்து வழங்கினார்.கிளை செயலாளர் ஜெ.ஜாபர் அலி வரவேற்புரை ஆற்றினார்.மார்க்க ஒழுக்கங்களை பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி அன்சர் ஹுசைன் ஃபிர்தௌசி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார். மார்க்க கடைமைகளை அன்றாட வாழ்வில் பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி ஜமாலுத்தின் ஃபாஷி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார்.நிகழ்ச்சியில்
அப்துல் அஜீஸ்,நா.பீர்மரைக்காயர்,அ.அப்துல் வாஹித்,குவைத் மீடியா செயலாளர் எஃப்.என்.முஜிபுர் ரஹ்மான்.மற்றும் ஏறாளமானோர் கலந்து பயனடைந்தனர்.
இரவு உணவுடன் கிளைத் தலைவர் எ.சாதிக் பாட்ஷா,கிளை பொருளாள‌ர் வி.சாதிக்.ஆகியோரின் ஒருங்கினைப்பில் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
நிக‌ழ்ச்சி ஏற்பாடு ஃபாஹ‌ஹில் துனை ம‌ண்ட‌ல‌ம்.

Friday, March 27, 2009

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில்
http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள்
மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர்
பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர்
பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக்
கொள்கிறோம்..
இணையத்திலேயே http://www.elections.tn..nic.in/forms.htm படிவங்கள்
அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை
வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை
தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும்
வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர்
பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.
குறிப்பாக: முஸ்லிம் வாக்காளர்கள் சமுதாய நலன் கருதி பெயர் சரிபாக்கும்
விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கரையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, March 25, 2009

நெல்லை மாநகராட்சி முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நெல்லை மாநகராட்சி முற்றுகைதிருநெல்வேலி மாநகராட்சி 29வது வார்டு மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெருக்களுக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் குடிநீருக்காக சிரமப்பட்டனர். இந்நிலையை போக்கக் கோரி நெல்லை மாநகராட்சியை 21.03.2009 அன்று காலை தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாருக் தலைமையில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இப்பகுதியில் இரண்டு தினங்களில் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்படும் என்றும் அதுவரை இப்பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்தார்.அப்போது மாவட்ட துனை தலைவர் கே.ஸ்.ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் உஸ்மான் கான், மேலப்பாளையம் நகர தலைவர் மைதீன் பாதுஷா, செயலாளர் காசீம் பிர்தௌசி,பொருளாள‌ர் காஜா, 29வது வார்டு, செயலாளர் பி.செய்யது அப்துல் காதர், தலைவர் கபூர், பொருளாளர் ஞானியார், துனை செயலாளர் சுல்தான், துனை தலைவர் அஜீஸ், மருத்துவ அணி செயலாளர் எ.கே.அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, March 20, 2009

திருநெல்வேலி செங்கோட்டையில் நாளை ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மார்ச் 18:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் உஸ்மான்கான் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் மீது போலீஸôர் பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
இதைக் கண்டித்தும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைச் செயலர் எஸ். மைதீன் சேட்கான் தலைமை வகிக்கிறார்.

Monday, March 16, 2009

மமகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

மேலப்பாளையம், மார்ச்.17-
சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இல்லாமல் மத்தியிலும், மாநிலத்திலும் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது`` என்று, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எஸ்.ஹைதர் அலி கூறினார்.
பொதுக்கூட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் நிலை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக வளைகுடா பகுதிகளுக்கான முன்னாள் செயலாளர் கே.ஏ.பசூலுல்லாஹி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான எஸ்.ஹைதர் அலி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமுதாய மக்களுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசியல் ரீதியாக செயல்பட ஒரு அமைப்பு தேவை என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி மனித நேய மக்கள் கட்சி உருவானது. இதில் முஸ்லிம்களுடன், முஸ்லிம் அல்லாத மக்களும் இணைந்துள்ளனர்.
நாட்டில் 20 சதவீதமாக உள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு அரசியல், ஆட்சி அதிகாரம் போன்றவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபடும். இது தவிர தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த அமைப்பு போராடும். அரசியலில் தூய்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் இயக்கமாக இந்த கட்சி கடைசி வரை பாடுபடும். மத்தியிலும், மாநிலத்திலும்
கடந்த தேர்தலின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மத்தியில் காங்கிரசையும், மாநிலத்தில் தி.மு.க.வையும் ஆதரித்தது. ஆனால் இந்த 2 இயக்கங்களும் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டன. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்த 7 சதவீத இடஒதுக்கீடு தரவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் இதுபற்றி எடுத்துக்கூறவில்லை.
வாணியம்பாடி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் த.மு.மு.க.வுக்கு தருவதாக உறுதி அளித்த தி.மு.க. அதை செயல்படுத்தவில்லை. எனவே தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்க மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியுள்ளது. சிறுபான்னை மக்களின் ஆதரவு இல்லாமல் மத்தியிலும், மாநிலத்திலும் இனிமேல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. 15-வது பாராளுமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி பிரதிநிதிகள் தமிழகத்தில் இருந்து நிச்சயம் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எஸ்.ஹைதர் அலி பேசினார். கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் காஞ்சி பி.அப்துல்சமது, மாவட்ட த.மு.மு.க. செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர் கே.எஸ்.ரசூல் மைதீன், மேலப்பாளையம் த.மு.மு.க. நகர தலைவர் கே.கே.மைதீன், செயலாளர் காசிம் பிர்தவுசி, பொருளாளர் ஏ.காஜா குவைத் மங்காஃப் கிளைச் செயலாளர் செய்யது ஹஜ்ஜப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குவைத்தில் ரிக்ஃகா பகுதியில் புதிய தமுமுக கிளை துவக்கப் பட்டது.

வெள்ளி,march,13,2009
குவைத் மண்டலம், ரிக்ஃகா பகுதியில் புதிய தமுமுக கிளை துவக்கப் பட்டது. நிகழ்ச்சியை ஷாநவாஸ்.கிராத் ஓதி தொடங்கிவைத்தார்.
ஜாஃபர் அலி . வரவேற்புரை ஆற்றினார்.
குவைத் மண்டல செயலாளர் ஷா நவாஸ் தலைமை தாங்கினார், துணை மண்டல பொருளாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை உரையில் மக்கள் உரிமை பத்திரிகையின் அவசியம் குறித்து பேசினார்.துணை மண்டல செயலாளர் அ.அப்துல் வாஹித், கிளையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். சிட்டி துணை மண்டலத் தலைவர் நா.பீர் மரைக்காயர், தமுமுக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேசினார். பின்பு கிழ்கண்ட வாரு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள். கிளைத் தலைவராக கொள்ளிடம் தைக்கால் A.சாதிக், கிளைச்செயலாளராக‌ அய்யம்பேட்டை ஜாஃபர் அலி, பொருளாளராக திருவாரூர். V.சாதிக்.ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
ரிக்ஃகா கிளைத்தலைவர் நன்றி உரையாற்றினார்.
இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

Saturday, March 14, 2009

அல்லாஹ்-வின் பக்கம் விரைந்து வாருங்கள்...

அல்லாஹ்-வின் பக்கம் விரைந்து வாருங்கள்... மாபெரும் இஸ்லாமிய மாநாடு

Tuesday, March 10, 2009

மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை:-

திருநெல்வேலி
மேலப்பாளையத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் லட்சிய திருமணவிழா த.மு.மு.க. ஏற்பாட்டில் நேற்று காலை நடைபெற்றது. லட்சிய திருமணம்திருமணத்தில் வரதட்சணை வழங்குவதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் மணமகன், மணமகளுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் விழா நேற்று மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மேலப்பாளையம் செய்குல் அக்பர் தெருவில் நேற்று காலை 11 மணிக்கு நடந்த விழாவுக்கு த.மு.மு.க. மாநில பொருளாளர் ரகுமத்துல்லா தலைமை தாங்கினார். வரதட்சணை கொடுத்தார்விழாவில் மணப்பெண் எஸ்.ஏ.முகர்ரமாவுக்கு, மணமகன் எஸ்.முகமது அபுபக்கர் சித்திக் வரதட்சணை வழங்கினார். பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனின் தந்தை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தண்டன் சேக்மன்சூர்,தாய் சிமிட்டி சுலைகா, மணமகளின் தந்தை சுல்தான் அப்துல்ஹமீது, தாய் மும்தாஜ் மற்றும் நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் பாருக்,செயலாளர் உஸ்மான்கான்,துணை செயலாளர் ரசூல்மைதீன்,நகர செயலாளர் காசிம் பிர்தௌசி,பொருளாளர் காஜா மைதீன்,மாநகராட்சி சுகாதார உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம்,காளிமுத்து உள்பட த.மு.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வளைகுடா த.மு.மு.க. முன்னாள் அமைப்பாளர் முகமது பஸ்லுல் இலாஹி செய்திருந்தார்.

Friday, February 20, 2009

முஸ்லிம் மாண‌வி சாதனை:-

சென்னை அறிவியல் விழா 2009 என்ற நிக‌ழ்ச்சியில் திண்டுகல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த ஃபவுஸுல் ஹிதாயா முஸ்லிம் மாண‌வி மாநில அளவிலான அறிவியல் சார்ந்த போட்டியில் செயற்கைகோள் மாதிரி தயாரித்து சாதனை படைத்தார். போட்டியில் மாநிலத்தில் மூன்றாமிட‌ம் பெற்று பரிசுப் பெற்றுள்ளார். திண்டுகல் நாகல் நகரில் உள்ள‌ அண்ணாம‌லையார் ம‌க‌ளிர் மேல்நிலை ப‌ள்ளியில் ப‌யிலும் முஸ்லிம் மாண‌வி சென்னையில் நடந்த‌ சென்னை அறிவியல் விழா 2009 என்ற நிக‌ழ்ச்சியில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாமிட‌ம் பெற்றார்.
சென்னையில் விவேகான‌ந்த‌ர் அர‌ங்கில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி. ப‌ரிச‌ளித்து சான்றித‌ழ் வ‌ழ‌ங்கினார்.
இது குறித்த‌ த‌க‌வ‌ல் கிடைத்ததும் அந்த ‌மாண‌வியை தொட‌ர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக‌ள் கேட்ட‌றிந்தோம்.இது குறித்து அந்த மாணவி கூறுகையில் பள்ளி ஆசிரியர்கள் நல்ல பாராட்டுவார்கள் ஊக்கமளிப்பார்கள் என்றார். அவர் ப‌டிக்கும் பள்ளியில் இவ‌ர் சிற‌ந்த‌ மாண‌வியாக‌வும் அதிக‌ ம‌திபெண் ‌ எடுக்கும் மாண‌வியாக‌வும் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளின் பாராட்டுக‌ளை எப்போதும் பெற்று வ‌ருவ‌தாக‌வும் குர்‍‍‍‍‍ஆன் ஓதி தொழுகையை பேனுவதாகவும் அவ‌ர் தாயார் தெரிவித்தார்.
மாணவியின் த‌ந்தை அபுல் அன்ஸர். குவைத்தில் ப‌னிபுரிகிரார்.மற்றும் இறு ச‌கோத‌ரிக‌ள் உள்ள‌ன‌ர்.


Wednesday, February 11, 2009

"மனிதநேய மக்கள் கட்சியின்" தொடக்க விழா மாநாடு பத்திரிக்கைகளின் பார்வை

"மனிதநேய மக்கள் கட்சியின்" தொடக்க விழா மாநாடு பத்திரிக்கைகளின் பார்வை:


பீர் மரைக்காயர்

Tuesday, February 10, 2009

புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!

புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!தமுமுகவின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி!!நமது செய்தியாளர்
நெல்லை மாவட்டம் புளியங்குடி கீழப்பள்ளி வாசல் ஜமாஅத்தை சார்ந்தவர் அப்துர் ரசீத். சாதாரண டீக் கடை மூலமாக தனது குடும்பத்தை நடத்தி வந்தார். 2000 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் புளிங்குடியில் இருந்து பாளையங் கோட்டை கிரசண்ட் நகருக்கு தப்லீக் குழுவினருடன் இஸ்லாமிய ஊழியம் செய்வதற்காக புறப்பட்டார். காலை சஹர் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நேரம் அது. கைகளில் அரிவாள், கூர்மையான கத்திகளுடன் பள்ளிவாசலுக்குள் திபுதிபுவென புகுந்த சங்பரிவார கும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்திற்குள் அப்துர் ரஷீத் மீது வெடிகுண்டை வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
பள்ளிவாசலில் நடந்தேறிய இந்த படுகொலை சம்பவம் தமிழக முஸ்­ம் களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவரின் படுகொலையைக் கண்டித்து புளியங்குடி, தென்காசி, மேலப் பாளையம், நெல்லை உள்பட தமிழகத் தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வீரியமாக நடைபெற்றன. தடையை மீறிய ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் வீரியமான போராட்டங்கள், பேரணி என போராட்டங்கள் பல கட்டங்களை எட்டியது. இதனை ஒடுக்குவதற்காக அன்றைய நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) கண்ணப்பன் ஆங்காங்கே விக்ரக பீடங்களில் உடைப்பு ஏற்படுத்தி, அநியாயமாக மேலப்பாளையம் ரசூல் மைதீன் உள்ளிட்ட 4 தமுமுகவினர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்தோடு மட்டுமில்லாமல் கடையநல்லூர் காவல்துறை உதவியாள ராக இருந்த சக்கரவர்த்தி, மைதீன் பிச்சை மற்றும் மாரியப்பனை அடித்து சித்தர வதை செய்து தாங்கள்தான் குற்றவாளி கள் என வாக்குமூலம் வாங்கி இந்த கொலை வழக்கின் திசையை மாற்றினர். இதில் மைதீன் பிச்சை என்பவர் படு கொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீதின் மகன் ஆவார். மகனே தந்தையை படு கொலை செய்த பயங்கரம் என தமிழக மக்களின் மனநிலையை மாற்ற காவல் துறை நடத்திய மாபெரும் நாடகம் அது. சங்பரிவார கும்பல்களின் சதியை மறைத்து அப்துர் ரஷீதின் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது காவல்துறை.
அடக்குமுறைக்கு எதிராகவே களம் கண்டு வந்த தமுமுக காவல்துறையின் சதியை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்த பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையத்தில் அப்துர் ரஷீதின் படுகொலைக்கு நீதி கேட்டு சுமார் 30,000க்கும் மேற்பட்ட முஸ்­ம்கள் கலந்து கொண்ட கண்டன பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி '' 15 நாட்களுக்குள் உண்மை குற்றவாளி களை பிடிக்கவில்லையெனில் தொடர்ச்சி யான சிறை நிரப்பும் போராட்டங்களின் மூலம் தமிழகத்தையே ஸ்தம்பிக்க செய்வோம் எனக் கூறினார். தமுமுகவின் சிறை நிரப்பும் போராட்ட அறிவிப்பின் எதிரொ­யாக தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தர விட்டது. மைதீன் பிச்சை மற்றும் மாரியப்பன் குற்றவாளி இல்லையென நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட னர். ஆனால் அரசு அறிவித்த உதவித் தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அரசு வேலையும் அந்த குடும்பத்திற்கு வழங் காமல் காலங்கடத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமுமுக தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை நடத்தியது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அப்துர் ரஷீத் கொலை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் ஒன்று கடையநல்லூரில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடந்தது. இதில் 3,000க்கு மேற்பட்ட முஸ்­ம்கள் கலந்து கொண்டனர். நெல்லை பாளையங்கோட்டையில் அடைமழையையும் பொருட்படுத்தாது தமுமுக சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானோர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் 18.12.2008 அன்று தமிழக காவல் துறை தலைவர் ஜே.பி. ஜெயின் நெல்லை வந்தபோது தமுமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை வழங்க வலியுறுத்தினர். இதன் விளைவாக கடந்த 09.02.2009 அன்று அப்துர் ரஷீத் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையான ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அரசு வழங்கியது.

என் வாழ்வில் இருளை கிழித்து ஒளியை கொடுத்ததே தமுமுக தான்!''நானும் எனது தந்தையும் தான் டீக் கடை நடத்தி வந்தோம். எனது தந்தையையே நான் கொன்று விட்டதாக கூறி காவல்துறை என்னை கைது செய்தது. ஆனால் அல்லாஹ்வின் உதவியால் தமுமுகவினர் என்னைக் காப்பாற்றி காவல்துறையின் பொய் முகத்தை கிழித்தனர். என் வாழ்வில் இருளை அகற்றி ஒளி ஏற்றியது தமுமுகதான்'' என்றார்.