தமிழக அரசியலில் திருப்பு முனையாக தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளும் மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால், இக்கட்சிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. குவைத்தில் வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்தும்.

கலந்துரையாடல்கள் மூலமும் தமிழகத்தில் சுமார் 5 லட்ச ஓட்டுகள் குறி வைக்கப்பட்டுள்ளது.

இதனை செயல் படுத்தும் விதமாக 16.04.2009 வியாழன் இரவு 7.30 மணியளவில் குவைத் திருச்சி ஓட்டலில் வைத்து தொழிலதிபர்கள், இஸ்லாமிய இயக்க, மற்றும் சங்கத்தின் தலைவர்கள், முக்கியஸ்தர்களை அழைத்து அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குவைத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் திருச்சி அமானுல்லாஹ், தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஷா நாவாஸ் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்.சிறப்புரையாற்ற சவுதி தம்மாம் மண்டல தலைவர் ஆரிப் மரைக்காயர்,கஸாலி குவைத்திலுள்ள பேராசிரியர் தாஜித்தின்,இஸ்லாமிய அலைப்பாளர் அன்வர் ஹுசைன் மற்றும் பல சமூதாய இயக்க தலைவர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமுமுக நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கினைப்பு: குவைத் தேர்தல் பணிக்குழு
தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்:
1.ஷாநவாஸ்
2.முஜிபுர்ரஹ்மான்
3.சாஹுல் ஹமீது
4.அமானுல்லாஹ்
5.இஸ்மாயில்
செய்திகள்:நா.பீர்மரைகாயர்.
No comments:
Post a Comment